சமையல் குறிப்புகள்

2021 அதிகம் தேடப்பட்ட உணவு வகைகள்!!!

Published

on

2021 ஆம் ஆண்டின் இறுதியில், கூகுள் 2021 இல் பிரபலமான பல விடயங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளையும்  வெளியிட்டது.

 

அதில் முதலிடம் பிடித்த ஐந்து உணவுகளை பார்ப்போம்.

 

எனோகி காளான்

2021 ஆம் ஆண்டு அதிகம் பிரபலமான  உணவுப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது எனோகி காளான். எனோகி காளான்கள் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வளரும் நூடுல் போன்ற காளான்கள். இந்த காளான்கள் இந்தியாவில் ஒரு கிலோ 500 ரூபாயாக விற்கப்படுகிறது.

மோதகம்

2021 ஆம் ஆண்டு அதிகம் மக்களால் தேடப்பட்ட உணவுகளில் விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

மெத்தி மட்டர் மலாய்

இது மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்த மெத்தி மட்டர் மலாய் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஆகவே தான் 2021 இல் இந்தியாவில் மக்கள் அதிகமாக மெத்தி மட்டர் மலாய் ரெசிபியின் செய்முறையை தெரிந்து கொள்ள அதிகம் கூகுளில் தேடியுள்ளனர்.

பாலக்/பசலைக்கீரை

2021 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் தேடிய மற்றொரு உணவு பாலக். பொதுவாக பாலக் கீரை ஏராளமான சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான மற்றும் சுவையான கீரை. இந்த கீரையை கடைவது மட்டுமின்றி, பாலக் சிக்கன், பாலக் பன்னீர் என்று பலவாறும் சமைத்து சாப்பிடலாம்.

சிக்கன் சூப்

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது விரைவில் குணமடைய சிக்கன் சூப் உதவும். அதுவும் கொரோனா வந்த பின்னர், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் ஆரோக்கியமான உணவுகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தானோ என்னவோ மக்கள் 2021 ஆம் ஆண்டில் சிக்கன் சூப் பற்றி அதிகம் தேடியுள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version