சமையல் குறிப்புகள்

பாசிப்பயிறு குழிப்பணியாரம் செய்வது எப்படி?

Published

on

பாசிப்பயறை சாப்பிடுவதால், இரும்புச் சத்து மற்றும் புரதச் சத்து எமது உடலுக்கு கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்:

பாசி பயிறு – 200 கிராம்
புழுங்கல் அரிசி – 50 கிராம்
உளுந்து, வெந்தயம் – 25 கிராம்

தாளிப்பதற்குத் தேவையானவை;

கடுகு, கறிவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 3

செய்முறை:

பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதல் நாள் இரவு பாசிப் பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும்.

காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாகக் கலக்கி உப்பு சேர்த்து 2 மணி நேரம் புளிக்க விடவும்.

தாளிப்பதற்கு மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கொண்டு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

#Healthyrecipes

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version