சமையல் குறிப்புகள்
வீட்டில் இலகுவில் செய்யக்கூடிய இனிப்பான தேங்காய் போளி
குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் மிகவும் பிடித்தமானவை.
அந்த வகையில் தேங்காய் போளி அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவைமிகுந்த உணவாகும். கடைகளில் செய்வது போல வீட்டில் இலகுவாக இனிப்பான தேங்காய் போளி செய்வது எவ்வாறு என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மா – 200 கிராம்
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 100 கிராம்
தேங்காய் பூ – தேவையான அளவு
சீவிய முந்திரி – 50 கிராம்
சீனி – 300 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
- முதலில் தேங்காயை பூவாக துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
- பின்பு கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ரொட்டி செய்வது மாவை பிசைந்துகொள்ளுங்கள்.
- பின்பு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து 2 மணித்தியாலயம் மூடி வைத்துவிடுங்கள்.
- பின்பு சீனியை ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்கவிடுங்கள்.
- சீனிக் கலவை பாகானதும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, துருவிய தேங்காய் பூ, சீவிய முந்திரி சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
- பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
- குழைத்து வைத்த மாவை இரு மணிநேரம் கழித்து எடுத்து பூரி வடிவில் தட்டி அதன் மேல் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி நெய் தடவி மாவை விரல்களால் சப்பாத்தி போன் றுதட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றி நெய் விட்டு இரு புறமும் சிவக்கும்படி சுட்டெடுக்கவும்.
சூடான சுவையான தேங்காய் போளி ரெடி.
You must be logged in to post a comment Login