சினிமா

நடிகர் ரகுவரனின் கடைசி நாட்களில் நடந்த சோகம்

Published

on

நடிகர் ரகுவரனின் கடைசி நாட்களில் நடந்த சோகம்

தனித்துவமான குரல் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தான் நடிகர் ரகுவரன்.

உடல்நிலை சரியில்லாததால் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காக யாரடி நீ மோகினி படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.

ஸ்டைலான, வித்தியாசமான குரல் கொண்டு மக்களை கவர்ந்த ரகுவரன் என்ற வில்லனின் இடம் இப்போதும் காலியாகவே உள்ளது என்றே கூறலாம்.

அவர் அளவிற்கு யாரும் சினிமாவில் வில்லனாக வரவில்லை. ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரகுவரன் நடிகர் ரஜினியோடு பாட்ஷா, மனிதன், சிவா உட்பட பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

நடிகர் ரகுவரன் இறக்கும் கடைசி நேரத்தில் என்ன நடந்தது போன்ற விஷயங்கள் குறித்து அவரது சகோதரர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அண்ணன் எதற்காக குடித்தார் என்று எங்களுக்கு தெரியாது,

அப்படி ஒரு குடி பழக்கம் இருந்தது. நிஜ வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. அவருடைய உடல் நிலை கடைசி காலத்தில் முடியாமல் போவதை அவரே உணர்ந்து இருந்தார்.

யாரடி நீ மோகினி படத்திற்கு உடல்நிலை மிகவும் மோசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைக்கேள்விப்பட்டதுமே நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பை எல்லாம் நிறுத்திவிட்டு மருத்துவமனை வந்துவிட்டார், அவர்கள் இருவருக்கும் நல்ல பழக்கம்.

அண்ணனின் இறப்பு ரஜினி அவர்களை பெரிதும் பாதித்தது, அவரின் கடைசி நாள் அன்று மருத்துவமனையிலேயே ரொம்ப நேரம் இருந்தார் என கூறியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version