சினிமா

உலகைச் சுற்றும் அஜித்! விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்?

Published

on

உலகைச் சுற்றும் அஜித்! விடாமுயற்சிக்கு எப்போது தான் விடிவு காலம்?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி,கமல், விஜய், விக்ரம், சூர்யா போன்றவர்கள் தங்களுடைய படங்களின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் கொடுத்து வருகின்றனர்.

அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார் மற்றும் படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்ற அப்டேட்டுகளை கொடுத்து பல மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இதுவரை விடாமுயற்சி படம் குறித்து அப்டேட்டுகள் வெளிவரவில்லை.

பைக் ரைடில் ஆர்வம் உள்ள அஜித் அடிக்கடி பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ஆகஸ்ட் மாதத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறி வந்த நிலையில் மீண்டும் அஜித் வேல் டூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் படக்குழு தரப்பில் கண்டிப்பாக ஆகஸ்ட் 3ம் வாரத்தில் தொடங்கும் என்றே கூறப்படுகிறது

Exit mobile version