அழகுக் குறிப்புகள்

பஞ்சு போன்ற பாதங்களைப் பெற…

Published

on

பஞ்சு போன்ற பாதங்களைப் பெற அனைவரும் விரும்புவார்கள். இதற்கு பாதங்களை பராமரித்தால் மாத்திரமே பெறலாம். இவ்வாறு பராமரிக்கும் சில இலகு வழிமுறைகளை பார்ப்போம்.

  • வாரத்துக்கு ஒருமுறை நகங்களை வெட்டி பாதங்களை தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியில் அழுக்கு அண்டவிடாதும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் மருதாணி இலையை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்புக்கள் மறையும்.
  • உருளைக்கிழங்கை காய வைத்து மா போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பாதத்துக்கு பூசிவர கருமை நீங்கி பாதம் மிளிரும்
  • தினமும் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி வந்தால் பாதத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  • பாதங்களை எலுமிச்சை தோலால் தேய்த்து கழுவி வந்தால் பாத வெடிப்புக்கள் குணமாகும்.
  • இரவு நேரத்தில் தூங்கும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்து வந்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
  • இரவில் தூங்கும் முன்பு, அன்னாசி பழத்தை குதிகால் வெடிப்பு பகுதியில் தடவி,   காலையில் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் விரைவில் மறைந்து விடும்.
  • காற்றோட்டமான காலணிகளை அணியுங்கள். இது காலில் ஏற்படும் புண்களை தவிர்த்து மிருதுவாக உதவும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version