அழகுக் குறிப்புகள்

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா…?

Published

on

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா…?

அனைத்து பருவ காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவ குணம் கொண்ட பழங்களில் எலுமிச்சை பழம் முதலிடம் பெறுகிறது.

இயற்கை அழகு பெறும் பொருள்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. எலுமிச்சைப் பழத்தின் தோல் எமது ஆரோக்கியத்துக்கு சிறந்ததொன்றாகும்.

எலுமிச்சை தோலில் புரதம், கொழுப்பு மற்றும் விற்றமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.  உடல் நலக் கோளாறுகளைப் போக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது.
எலுமிச்சை சாறில் உள்ள சத்துக்களை விட அதன் தோலில் தான் அதிக விற்றமின்கள், பீற்றா, கல்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அந்தவகையில் எலுமிச்சை தோலில் உள்ள  நன்மைகள் இதோ…

எலுமிச்சை தோலில் சருமத்துக்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதில் சருமத்தை மிருதுவாக்கி பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்கும். இறந்த செல்களை நீக்கி புது செல்களை உருவாக்கத் தூண்டும்.

எலுமிச்சைத் தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் பொடி செய்து அத்துடன் ஒலிவ் ஒயில் சேர்த்து முகத்துக்கு பூசி வந்தால் சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நீங்கும்.

நகங்களை 10 நிமிடங்கள் எலுமிச்சை தோலால் தேய்த்த பின்பு கழுவ வேண்டும். இது போன்று செய்து வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்துவிடும்.

காலையில் ஒரு கப் தேநீரில் புதிய எலுமிச்சை தோல்களை சேர்த்து ஊறவிட்டு பருகினால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படுவதுடன் வெள்ளை இரத்த அணுக்களின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
அத்துடன் வாய் துர்நாற்றத்தை போக்கி வாய் வழி நோய்களை எதிர்த்தும் போராடும்.

எலுமிச்சை தோலை நன்கு அரைத்து சூப் அல்லது பானங்களின் மேல் தெளிக்கலாம்.

இதனை எடுத்த உடனே குப்பையில் தூக்கி வீசாது, எலுமிச்சையின் தோலின் மூலம் இளமையை தக்கவைத்து உடலுக்கு புத்துணர்ச்சியையும் நறுமணத்தையும் பெறுவோம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version