BiggBossTamil

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா?

Published

on

ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 7!! எப்போது தெரியுமா?

சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 6 சீசன்களைக் கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

நிகழ்ச்சி ஒருபக்கம் என்றாலும் பொதுவான விஷயத்தை பதிவு செய்வார். கடந்த 6வது சீசனில் கூட ஒரு நல்ல விஷயத்தை கூறிவந்தார், புத்தகம் படிக்க வைப்பது தான்.தான் இதுவரை படித்த சில அருமையான புத்தகங்கள் குறித்து அதை மக்களையும் படிக்க வைத்தார்.

அடுத்து வரப்போகும் புதிய சீசனில் அப்படி என்ன விஷயத்தை கொண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை.ஒவ்வொரு சீசனிற்கும் பல கோடி சம்பளத்தை உயர்த்தி வரும் கமல்ஹாசன் இந்த 7வது சீசனிற்காக ரூ. 130 கோடிக்கு மேல் சம்பளம் பெறலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்திற்குள் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 Comment

  1. Pingback: இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா? - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version