சினிமா
நடன இயக்குனரின் உடற்பயிற்சி செயலியை தொடங்கி வைத்த கமல்!
‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.
தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.
ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப், “உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.
இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்” என்று கூறினார்.
#cinema
You must be logged in to post a comment Login