அழகுக் குறிப்புகள்
மஞ்சள் தரும் மகத்துவம்!
மஞ்சள் தரும் மகத்துவம்!
மஞ்சள் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சருமப் பராமரிப்பிலும், திருமணங்களிலும் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்ததே. மஞ்சளின் பிரகாசமான நிறத்துக்கு, அதிலுள்ள கர்கியூமின் என்ற நிறமியே காரணம். இது மிகவும் முக்கியமான வேதிப்பொருள்.
புண்களை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. அழற்சி-வீக்கத்தை குறைக்கும் அற்புதமான நிறமி. மஞ்சளில் நச்சுத்தன்மை கிடையாது.
மார்புச்சளி அல்லது கன்றிப் போன ஊமைக் காயத்துக்கு பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதன் குணமளிக்கும் பண்பை அதிகரிக்க, பனங்கற்கண்டு சேர்ப்பது கூடுதல் பலன் தரும். மஞ்சளின் மருத்துவக் குணங்கள் தொடர்பான பட்டியலுக்கு முடிவே கிடையாது.
ஏற்கனவே, சொன்ன பலன்களைத் தாண்டி கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும் இயற்கை மருந்தாக மஞ்சள் இருக்கிறது. மண்ணீரல், கணையம், வயிற்றுச் செயல்பாடுகளை அது மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்குகிறது. செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை கட்டிகள், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது. நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து அல்லது முட்டா மஞ்சளை உரைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும்.
முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது. இயற்கை அழகோடு மஞ்சள் அழகும் இணைந்து பெண்கள் ஆரோக்கிய அழகை பெற்றிருந்தார்கள். வயது பேதமில்லாமல் முகத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று இளம்பெண்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
மஞ்சளை உபயோகப்படுத்தினால் குறைந்த நாட்களில் பயன்பாடு தெரியும்.கஸ்தூரி மஞ்சளை குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். பெண்கள் சிலருக்கு ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் மாறுபாடுகள் முகத்தில் தேவையற்ற ரோம முளைக்கிறது.
இத்தகைய ரோமங்களை நீக்க சிறந்த இயற்கை வைத்திய பொருளாக மஞ்சள் இருக்கிறது. தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும்.
எதிர்காலத்தில் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது. மாதவிடாய்க் காலங்களுக்கு முன் சிலருக்கு முகத்தில் சிறு சிறு பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகக் கூடும்.பகல் நேரங்களில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் மஞ்சளைக் குழைத்து பூசி வந்தால் பருக்கள் வருவது தடைபடும்.
#helthy
You must be logged in to post a comment Login