அழகுக் குறிப்புகள்

முடி வளர்ச்சியை தூண்டும் கற்றாளை!

Published

on

கற்றாழையில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து. அவை தலையில் உள்ள இறந்த செல்களை அழித்து புது செல்களை வளர செய்கின்றன.

எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.

கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு தரும் தாவரம் கற்றாழை. கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன. கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த கற்றாலை ஜெல் மிக நல்லது.

தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது.

கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது. கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும் போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கற்றாழை தந்து, முடியை பாதுகாக்கிறது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கற்றாழை தலை முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. எனவே கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும்.

இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் வீதம் பத்து முறை இந்த ஹேர் பேக்கை போட்டு விட்டு உங்களுடைய தலைமுடியில் ஏற்படும் நல்ல மாற்றத்தை தெரிந்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும்.

பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தலைப் பெறலாம். இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
#BeautyTips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version