அழகுக் குறிப்புகள்

சருமத்தை தங்கம் போல் ஜொலிக்கச்செய்ய செம்பருத்திப்பூ

Published

on

தற்போது கோடை காலம் வந்து விட்டதால் மக்கள் பலரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை சரும பிரச்சனை தான். அதில் கோடைகாலம் மட்டுமல்லாமல் குளிர்காலம் போன்ற கால நிலைக்கு ஏற்றவாறும் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

எந்த செயற்கை இரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையிலேயே நம்முடைய சருமத்தை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்கு நமக்கு பெரிதும் பயன்படுவது செம்பருத்தி பூ.

கிராமப்புறம் மற்றும் பல இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய இந்த சம்பவத்திற்கு பிறகு ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதிலும் இந்த செம்பருத்தி நம் சருமத்தை பாதுகாப்பதற்கு அதிகமாக உதவுகிறது. இந்தப் பூவை வைத்து நம் சருமத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.

செம்பருத்தி பூவை நன்றாக வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாலையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். செம்பருத்தி பொடி செய்ய இயலாதவர்கள், அந்தப் பூவை முதல் நாள் இரவே நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பின்பு காலையில் பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

இந்தக் கலவையை முகத்தில் தடவுவதற்கு முன்பு நாம் முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் வரை நீராவியில் காட்ட வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். அதன் பிறகு முகத்தை நன்றாக துடைத்து விட்டு கலந்து வைத்துள்ள பேஸ்டை தடவ வேண்டும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை இதை வைத்திருக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு ஒரு நாள் வரை நம் முகத்தில் எந்த சோப்பும் பயன்படுத்த கூடாது. அப்பொழுதுதான் கூடுதல் பலன் அளிக்கும். இதை நாம் வாரத்திற்கு ஒருநாள் செய்து வந்தால் நம் முகம் தங்கம்போல மினு மினுக்கும். மேலும் முகத்தில் ஏற்படும் தேமல் படை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

#Beauty #LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version