சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு! – சோகத்தில் திரையுலகு

Published

on

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது.

மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மயில்சாமி மறைவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version