சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி உண்ணும் காய்கறி தோசை

Published

on

தேவையான பொருட்கள்

தோசை மா – 2 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
கரட் – 1
பீன்ஸ் – 10
கோஸ் – சிறிதளவு
ஸ்வீட் கார்ன் – ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் – 1
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – அரை கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

* கரட்டை துருவிக்கொள்ளவும்.

* வரமிளகாய கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

* ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ப.மிளகாய், இஞ்சி, கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட், வேக வைத்த ஸ்வீட் கார்ன், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* பின்பு மிளகுத்தூள், கொரகொரப்பாக அரைத்த வரமிளகாய், தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* அவ்வளவுதான் இப்போது மொறுமொறுப்பான காய்கறி தோசை தயார்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version