பொழுதுபோக்கு

இன்று முத்த தினம் – முத்தங்களின் அர்த்தங்கள்

Published

on

உலகம் முழுவதும் நாளை (14ம் திகதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பெப்ரவரி 7ம் திகதி முதல் 14-ந்தேதி வரை காதலர் வாரம் கொண்டாடுகிறார்கள். இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு தினமாக கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில் 7ம் திகதி ரோஜா தினத்தில் தொடங்கும் இந்த வாரம் மறுநாள் ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வாலண்டைஸ்டே என கொண்டாடப்படுகிறது. அதன்படி காதலர்தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13-ம் திகதி அன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது.

முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஒரு வழியாக உள்ளது. முத்தம் கொடுப்பதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்கள்.

தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதேபோல 1980-களில் ஒரு ஆய்வில் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை முத்தமிடும் ஆண்கள் குறைவான விபத்தில் சிக்குகிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கூறுகிறது.

முத்தமிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும், முத்தத்தின் போது உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழித்து இதய துடிப்பை அதிகரிப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

முத்தம் ரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மனஅழுத்த கார்மோனின் அளவை குறைக்க உதவுகிறது என்றும் நன்மைகளை பட்டியலிடுகிறது.

உதட்டில் முத்தம், கைகளில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களை திறந்து முத்தம், கண்களை மூடிக்கொடுப்பது, கன்னத்தில் முத்தம், கண்களில் முத்தம், கழுத்தில் முத்தம் என முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.

இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம். நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.

மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள். கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும், கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும், கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம்.

இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version