சினிமா

இணையத்தில் அவதார் 2!! – அதிர்ச்சியில் படக்குழு

Published

on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது.

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான ‘அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்துள்ளது.

இதனை பலரும் பதிவிறக்கம் செய்து இலவசமாக பார்த்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version