அழகுக் குறிப்புகள்

மழைக்கால ‘மேக்கப்’ ரகசியங்கள்

Published

on

பல பெண்களின் அன்றாட பணிகளில் ஒன்றாக ‘மேக்கப்’ போடுவது உள்ளது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக உளவியல் கூறுகிறது. தோற்றத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் மேக்கப் உதவுகிறது.

ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப மேக்கப் போடுவது முக்கியமானது. இதனால், மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் அழகை மெருகேற்றிக்காட்டும். மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், அதற்கு ஏற்ப சிறப்பாக மேக்கப் போட்டு கொள்வதற்கு சில குறிப்புகள் இதோ…

 மழையில் நனைந்தாலும் அதிக வித்தியாசம் தெரியாமல் இருப்பதற்கு, குறைவான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. கலர் கரெக்டர், பவுண்டேஷன், கன்சீலர் என்று அடுக்கு அடுக்காக போடாமல், முக்கியமான பொருட்களைமட்டும் உபயோகித்தால், மழையில் நனைந்தாலும் உங்கள் முகம் சிறப்பாக தோற்றமளிக்கும். குறிப்பாக பிரைமரைத் தொடர்ந்து கன்சீலர் மற்றும் காம்பாக்ட் மட்டும் போட்டுக்கொள்வது மழைக்காலத்திற்கு ஏற்றது. பவுண்டேஷன் போட்டுக்கொள்ள விரும்பினால் அதனை பிரைமருடன் கலந்து போடுவது நல்லது.

 தண்ணீரில் அழியாத மேக்கப் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதே சமயம் முழு மேக்கப்புக்கு தேவையான, அனைத்து பொருட்களும் கிடைப்பது இல்லை. சில வாட்டர்-புரூப் மேக்கப் பொருட்களை மட்டும் பயன்படுத்தி, மற்றவற்றுக்கு சாதாரணப் பொருட்களை உபயோகித்தால் அது மேக்கப்பின் தரத்தைக் குறைக்கும். இதையும் படியுங்கள்: பெண்களை கவர்ந்த மெஹந்தி

 ப்ளஷ் (Blush) மற்றும் ஹைலைட்டர் (Highlighter) போன்றவற்றை பயன்படுத்த விரும்பினால் ‘பவுடர்’ வடிவில் இருப்பவற்றை பயன்படுத்தலாம்.  புருவம், இமைகள் மற்றும் விழிகளை சிறப்பாகக் காட்டும் ஐ லைனர், கண் மை (காஜல்) மற்றும் மஸ்காரா போன்றவை வாட்டர்-புரூப் வகையில் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்.

 காஜல் அணியும்போது, வழக்கமான கருப்பு நிறத்தில் அணியாமல் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் அணிந்தால் கரைவது தெரியாது, கண்கள் பெரிதாகத் தெரியும்.

 வாட்டர்-புரூப் லிப்ஸ்டிக் சந்தையில் கிடைக்கிறது. அதில் மேட் ரகத்தில் உள்ளவற்றை பயன்படுத்தலாம். லேசான நிறங்களான பிங்க் மற்றும் பழுப்பு நிறங்கள் மழைக்காலத்தில் சிறப்பாக இருக்கும்.

 இமைகளில் மஸ்காரா அணியும்பொழுது, முதலில் வழக்கமான ஒன்றை அணிந்து கொண்டு பின்னர் அதன் மேல் வாட்டர் புரூப் வகையை பயன்படுத்தினால் அதிக நேரம் நீடிக்கும். இமைகளை நீளமாக காட்டும். நீரில் அழியாது. மேக்கப் என்பது நம் அம்சங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுவது. அது சரியான அளவில் மற்றும் சீரான நிறத்தில் இருந்தால்தான் சிறப்பான தோற்றம் பெற முடியும்.

மழைக்கால மேக்கப்பை பொறுத்த வரை, குறைவான பொருட்களை பயன்படுத்துவதால் அழகான தோற்றம் பெறலாம்.

#beautytips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version