சமையல் குறிப்புகள்

தீபாவளி ஸ்பெஷல்! கேரட் லட்டு செய்வது எப்படி தெரியுமா?

Published

on

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் பலரது வீட்டில் இனிப்பு பலகாரங்கள் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு சற்று வித்தியாசமான இனிப்பு பலகாரத்தை செய்ய விரும்பினால் கேரட் லட்டு செய்து பாருங்கள்.

இந்த கேரட் லட்டு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். தற்போது இதனை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  •  கேரட் – 1 கப் (துருவியது)
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கண்டென்ஸ்டு மில்க் – 1/3 கப்
  • பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், துருவிய கேரட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
  • கேரட் சுருங்கி, அதில் இருந்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
  • பின் அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒட்டும் பதத்தில் வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
  • பின்பு அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளறி விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
  • கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போதே அதை சிறு சிறு லட்டுகளாக உருட்டி, அதன் மேல் நறுக்கிய பிஸ்தாவை வைக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் லட்டு தயார்.

குறிப்பு

கேரட்டில் இருந்து பச்சை வாசனை போன பின்னரே கண்டென்ஸ்டு மில்க்கை சேர்க்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கேரட் லட்டு அறை வெப்பநிலையில் ஒரு நாள் வரை நன்றாக இருக்கும். அதுவே ஃப்ரிட்ஜில் வைத்தால், 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

#Foodrecipe #Laddu

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version