சமையல் குறிப்புகள்

அசல் தேனை எப்படி கண்டறிவது ?

Published

on

கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் பயன்படுத்தி வருகின்றனர்.

இருபபினும் இதில் தான் கலப்படம் அதிகம் நடக்கும்.

அசல் தேன் எது ? எது கலப்பட தேன் என்பது பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது.  தற்போது அது எப்படி பற்றி பார்ப்போம்

  1. ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த தேனை, தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும் மேற்கொண்டு அந்த வெள்ளைத்தாளில் பரவாமலும் இருந்தால் அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்லது பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்
  2. ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒருதுளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாமல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
  3. ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்கவாட்டில் உள்ள மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எரிந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம். ஒருவேளை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version