அழகுக் குறிப்புகள்
பெண்களே! கண் இமைகளில் உள்ள முடி வளர வேண்டுமா? சில டிப்ஸ்
கண்களின் அழகை அதிகமாக்கி காட்டுவது இமைகளில் இருக்கும் முடிகள் தான்.
ஆனால் பலருக்கு அடர்த்தியாக இருக்காது. இவர்கள் செயற்கை கண் முடிகளே பயன்படுத்தவார்கள்.
உண்மையில் இந்த முடிகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பு உண்டு. இதனை எளிய முறையில் கூட செய்யலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
- தினமும் ஆமணக்கெண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.
- தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.
- இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விட வேண்டும். அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.
- நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம்.
You must be logged in to post a comment Login