அழகுக் குறிப்புகள்

உங்களுக்கு வறண்ட கூந்தலா? இதனை சரி செய்ய சில அழகு குறிப்புக்கள் இதோ!

Published

on

கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான்.

சிலருக்கு அடிக்கடி தலைக்கு குளிப்பதாலும், வெளிப்புறத்தில் உள்ள மாசுக்களின் பாதிப்பாலும், கூந்தல் வறண்டு காணப்படும்.

மேலும் கூந்தலுக்கு வண்ணம் பூசுதல், ரசாயன சிகிச்சை போன்றவையும் கூந்தலை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகவும் ஆக்குகின்றன.

இதை சரி செய்ய சில இயற்கை வழிகள் உள்ளது. அதனை இங்கே பார்ப்போம்.

 

  • வெண்ணெய்யை வறண்ட முடிகளில் தடவி மசாஜ் செய்யவேண்டும்., அரை மணி நேரம் ஊற விட்டு வழக்கம் போல் ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். பளபளப்பான கூந்தலைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
  • அவகாடோ பழம் வாங்கி அதை நன்றாக மசித்து அதனுடன் முட்டை சேர்க்கவும். அதை அப்படியே ஈரமான கூந்தலில் தடவுங்கள். 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கூந்தலைக் கழுவி மென்மையான கூந்தலைப் பெறலாம்.
  • கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்.
  •  அரை கப் ஆலிவ் ஆயிலை மிதமான சூட்டில் எடுத்து கூந்தலில் தேய்க்கவும். முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு ஷாம்பூ செய்தால் பளபளப்பான கூந்தலைப் பெறலாம்.
  • இரவில் ஊறவைத்த ஒரு கப் வெந்தயத்தை மைபோல் அரைத்து 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவ வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
  • கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும், பொலிவானதாகவும் மாற்றும். தயிர் கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும். வெந்தயம் கூந்தலுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.
  • கற்றாழை ஜெல் மூலமாக வறண்ட கூந்தலைச் சரிசெய்யலாம். சோற்றுக்கற்றாழை ஜெல்லை முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்கவும். இதன்மூலம் அது முடியின் வேர்க்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதைத் தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் ஷாம்பு கொண்டு அலசலாம்.
  • கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். தலைமுடி உலர்ந்த பின் 3 சொட்டுகள் ஆலிவ் எண்ணெய் பூசினால் கூந்தல் பட்டுப்போல் மென்மையாகும்.

#Hairtips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version