சமையல் குறிப்புகள்

நாவூறும் ருசியான சிக்கன் ஊறுகாய்! எப்படி செய்யலாம்?

Published

on

ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.

எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை பலர் ருசித்து ரசித்து சாப்பிடுபவர்கள்.

அந்தவரிசையில் அசைவ பிரியர்கள் பலரும் பிடித்த ஒரு ஊறுகாயாக ‘சிக்கன் ஊறுகாய்’ உள்ளது. தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை

  • எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி – 500 கிராம்
  • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக் கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 மேசைக் கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக் கரண்டி
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – ¼ கப்
  • கடுகுத்தூள் – 1 மேசைக் கரண்டி
  • வெந்தயத்தூள் – ¼ தேக்கரண்டி
  • எலுமிச்சம்பழம் – அரை மூடி
  • எண்ணெய் – 2 மேசைக் கரண்டி
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 5
  • கறிவேப்பிலை – 10
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.

மற்றொரு வாணலியில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.

பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கி அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

மற்றொரு வாணலியில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைத்து. இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்து சூடு தணியும் வரை ஆறவைத்து பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து, பரிமாறுங்கள்.

#FoodRecipe

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version