அழகுக் குறிப்புகள்

முகப்பருவை எளியமுறையில் விரட்ட வேண்டுமா? சில வழிகள் இதோ

Published

on

பொதுவாக நாம் அனைவருமே சந்திக்கும் முக்கியப்பிரச்சினைகளுள் முகப்பருவும் ஒன்றாகும்.

முகப்பரு விஷயத்தில் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை எளியமுறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

  • நல்ல தரமான ரோஸ் வாட்டர் மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் எடுத்துக் கொள்ளவும். முகத்தில் மெதுவாக தடவவும். தினசரி இரு முறை இதை செய்யவும்.
  • மஞ்சள், தயிர் இரண்டுமே பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும். முகத்தில் சமமாக பூசவும். 15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.
  • சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும். உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
  • சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.
  • இரண்டு மேசைக் கரண்டி வெள்ளரிச் சாருடன் ஒரு மேஜைக்கரண்டி பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
ஒரு பருத்தி பஞ்சு பந்தை இந்த சாறில் முக்கி முகத்தை துடைக்கவும். இது உங்கள் முகத்தை நன்கு சுத்தம் செய்ய உதவும்.
#Beauty Tips #PimpleProblem

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version