அழகுக் குறிப்புகள்

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ சில சூப்பரான டிப்ஸ்

Published

on

பெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை எப்படி எளிமையான முறையில் நீக்கலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

  • இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம்  பொழிவுடன் காணப்படும்.
  • பாதாம் எண்ணெயை இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
  • வேம்பின் இலையை அரைத்து சோப் போல பயன்படுத்தலாம். வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுயிற்களை அழித்து முகம் பொலிவாக இருக்கும். முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கவும் உதவும். சுருக்கங்களை நீக்கவும் வேம்பில் சக்தி உள்ளது.
  • தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.
  • உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதடு மற்றும் கன்னத்தை சுற்றி தடவி வர கருமை நீங்க சிறந்தது. லெமன் ஜுஸ் & ரோஸ் வாட்டர் சேர்த்து தடவி 10 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.
#Skincare #Darkspots

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version