சினிமா

நடிகை சுஷ்மிதா சென் 56 வயதான தொழில் அதிபருடன் டேட்டிங்! வைரலாகும் புகைப்படம்

Published

on

46 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், 56 வயதான தொழில் அதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாகி பரவி வருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில், மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாலைத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். புதிய வாழ்க்கை, புதிய பயணம்” என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

 #SushmithaSen  #LalitModi  

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version