அழகுக் குறிப்புகள்

முகப்பரு பிரச்சினைகளுக்கு அற்புத தீர்வு! இதோ உங்களுக்காக

Published

on

முகப்பரு எப்போதுமே பிரச்சனை தரக்கூடியவை தான். இதிலிருந்து சருமம் முழுமையாக விடுபட வேண்டும் என்றால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

அதற்கு இயற்கை வழிகளே சிறந்தது. தற்போது முகப்பருவை போக்க கூடிய எளியவழிகளை இங்கே பார்ப்போம்.

  • கொத்தமல்லி இலைகளை சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் கலந்து தினமும் இருவேளை முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவுபெறும். முகப்பரு தொந்தரவும் குறையும்.
  • ஒரு கைப்பிடி துளசியுடன் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து நன்றாக குழைத்து, முகத்தில் பூசுங்கள். உலர்ந்த பின்பு கழுவுங்கள். துளசி சரும பொலிவை மேம்படுத்தும். மஞ்சள் சருமத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும். முகப்பரு பிரச்சினையும் தீரும்.
  • முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.
  • மஞ்சள் தூள், புதினா சாறு கலந்து, உங்கள் முகப்பரு வடுக்களுக்கு தடவலாம். இதை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • மஞ்சள் தூள்: ஆன்டி-பாக்டீரியாவாகவும் மற்றும் புதினாவிலும் இந்த பண்புகள் இருக்கிறது. எனவே, இவை உங்கள் பருக்களை மிக வேகமாக தீர்க்கும்.

#pimple #skincare #acne

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version