அழகுக் குறிப்புகள்

சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள் !!

Published

on

வேப்பிலையை அரைத்து உடல் முழுவதும் பூசி சரியாக 15 நிமிடம் ஊறவைத்த பிறகு நன்றாக தேய்த்து குளித்து பாருங்கள். அதன் பின் சோப் போடக் கூடாது. நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். சருமத் தோல் நிறமேறும். மிக மென்மையாக மாறும்.

வறண்ட சரும பெற்றவர்கள் ரோஸ் வாட்டரில் சிறிது தேன் கலந்து முகம் கழுத்தில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் ஆழமாக உள்ள அழுக்கு, இறந்த செல்கள் வெளிவந்துவிடும். ஈரப்பதமும் அளிக்கும். மற்ற அழகு சாதனங்கள் போல் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாது.

எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள் அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். வறண்ட சருமம் உடையவர்கள் பழங்களை முகத்தில் தடவி உலர விட்டு கழுவினால் மிருதுவாகும்.

பயத்தம் மாவு அரைத்து வைத்துக் கொண்டு அதனை முகம் மற்றும் உடல் முழுக்க தேய்த்து சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, ஆரஞ்சு, திராட்சை போன்ற காய் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.

காலை எழுந்தவுடன் பன்னீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். இதனால், சருமத்தில் உள்ள அடைப்புகள் நீங்கி, நாள் முழுவதும் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version