சினிமா

மேகங்களுக்கு இடையே மிதக்கும் ஹோட்டல்! நம்பமுடியாத பல வசதிகள் உள்ளதாம்

Published

on

ஏமன் நாட்டை சேர்ந்த அறிவியல் தொடர்பாளரும், வீடியோ தயாரிப்பாளருமான ஹஷேம் அல்-கைலி பறக்கும் ஹோட்டலுக்கான மாதிரி வடிவத்தை வீடியோவாக உருவாக்கியுள்ளார்.

இந்த பறக்கும் ஹோட்டலின் வீடியோவில் இருக்கும் வசதிகளைக் கண்ட பலர் மிரண்டு போயுள்ளனர்.

அணுசக்தியால் இயங்கக்கூடிய 20 எஞ்சின்களைக் கொண்ட இந்த விமான ஹோட்டலில் 5,000 பேர் பயணிக்க முடியும்.

இந்த விமான ஹோட்டலில் பயணிப்பவர்களுக்கு 360 டிகிரி காட்சி, சொகுசு வசதிகள் கொண்ட அறைகள், பொழுதுபோக்கு தளம், வணிக வளாகம், விளையாட்டு மையங்கள், உணவகங்கள், பார்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்ற அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

இந்த ஸ்கை குரூஸ் விமானத்தை வடிவமைத்த ஹஷேம் அல்-கைலி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் சுயமாக இயக்கப்படவுள்ளதாகவும் இந்த விமானமே போக்குவரத்தின் எதிர்காலமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

ஒரு முறை பறக்கத் தொடங்கிவிட்டால் இந்த விமானம் மீண்டும் தரையிறங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அந்த வீடியோவில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்தாகும்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version