சினிமா
வாரிசு படம் இந்த ஆடை நிறுவனத்தின் காப்பியா? – பிரபல நிறுவனம் விளக்கம்
விஜய்யின் பிறந்தநாளை அன்று அவரின் அடுத்தப்படமான வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது.
இதனை பார்த்து பல ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சிலர் இதனை பிரபல ஆடை நிறுவனத்தின் போட்டோ ஷூட் புகைப்படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவிவந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து அந்த ஆடை நிறுவனம் தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதில் எங்கள் நிறுவனத்திற்காக இதுபோன்ற போட்டோ ஷூட் எதுவும் எடுக்கவில்லை என்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விஜய்யின் புகைப்படத்தை அகற்றிவிட்டு அதில் துல்கர் சல்மானின் படத்தை வைத்துள்ளார்கள் என்றும் எங்கள் நிறுவனத்தின் போட்டோஷூட் புகைப்படத்தின் காப்பிதான் வாரிசு ஃபர்ஸ்ட்லுக் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வாரிசு படக்குழுவிற்கு எங்கள் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிரபல ஆடை நிறுவனத்தின் காப்பி என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
#Cinema
You must be logged in to post a comment Login