அழகுக் குறிப்புகள்
கண்களை சுற்றி கருவளையமா? இதனை போக்க இதோ சில டிப்ஸ்!
பெரும்பாலான பெண்களுக்கு கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் பெரிய பிரச்சினையாக உள்ளது.
கண்ணுக்கு கீழே உண்டாகும் கருவளையம் உங்க கண்களின் அழகை கெடுத்து விடும்.
உங்கள் கண்களை மிக சோர்வாக காட்டும். கண்கள் சோர்வாக தெரியும் போது உங்க முகழகும் கெடுகிறது. எனவே கருவளையத்தை போக்க முயற்சிப்பது மிகவும் அவசியம்.
அந்தவகையில் கருவளையத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, தினமும் கண்களை சுற்றி பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் குறையும். விட்டமின் ஈ ஆயில் கொண்டு கண்களின் கீழ் தடவலாம்.
- உருளைக்கிழங்கிற்க்கு இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உண்டு. இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறை பஞ்சில் நனைத்து எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவ வேண்டும்.
- ரோஸ்வாட்டருடன் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், வாரம் இருமுறை செய்து வரலாம். தக்காளியை அரைத்து அதனை கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- வெள்ளரிக்காயை வட்டத்துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைக்கலாம். கண்களுக்கு குளிர்ச்சியும், சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
- சோற்றுக் கற்றாழை ஜெல் தடவி வரலாம். இதில் உள்ள சத்துக்கள் கண்களை சுற்றி உள்ள சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.
You must be logged in to post a comment Login