பொழுதுபோக்கு

ஆப்பிளை விட நெல்லிக்காய் சக்தி வாய்ந்தா?

Published

on

நெல்லிக்காயானது உங்கள் உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒரு அற்புத கனி ஆகும்.

நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம், கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து-1.2 மில்லிகிராம் இருக்கிறது.

அதனால் தான் ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் கருதப்படுகின்றது.

ஏனெனில் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பலவகையில் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
தலை முடி உதிராமல், வளர்ந்து, நரை முடி தோன்றுவதை தவிர்க்கிறது.ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.
கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது.
மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. இதனால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது.
உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.

நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுப்பது சிறந்தது.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version