அழகுக் குறிப்புகள்
கோடை கால சரும பராமரிப்புக்கு சிம்பிள் டிப்ஸ்
வெயில் காலத்தில், சருமம் வளர்ச்சியடைதலை தவிர்க்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிளானதும், செலவில்லாததுமான டிப்ஸ் உங்களுக்காக…
வாழைப்பழம் – ஒரேஞ்
வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதனுடன் சிறிது ஒரேஞ் சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். முகம் பளிச்சென்று மாறும்.
யோகட் – தர்பூசணி
எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு தயிர் மற்றும் யோகட் மிகச்சிறந்த பலனைத் தரும். அதேபோல தர்பூசணி வெயிலுக்கு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.
தர்பூசணி சாற்றுடன் தயிர் அல்லது யோகட் கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளுங்கள். முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்றமடையும்.
புதினா – முல்தானிமட்டி
புதினா மற்றும் முல்தானி மட்டி இரண்டுமே குளிர்ச்சியான தன்மை கொண்டவை. முல்தானி மட்டி சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உறிஞ்சிக் கொள்கிறது.
புதினா இலைகளை பிழிந்து எடுத்த சாற்றுடன், 2 ஸ்பூன் முல்தானிமட்டியைச் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளுங்கள். சருமம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
வெள்ளரிக்காய் – தேன்
வெள்ளரிக்காய் குளிர்ச்சித் தன்மை கொண்டது. தேன் சருமத்துக்கு மிகச்சிறந்த மாய்ச்சரைஸராக செயற்படும்.
வெள்ளரிக்காயை தோலுடன் பேஸ்ட்டாகவோ அல்லது சாறு மட்டுமோ எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்திருந்து சாதாரண நீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். சருமம் பஞ்சு போல மென்மையாக இருக்கும்.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் குளிர்காலத்தில் இதை தவிர்ப்பது நல்லது.
ரோஸ் வாட்டர் – சந்தனம்
சந்தனம் முழு உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள ரோஸ் வாட்டர் மிகச் சிறந்த நிவாரணி.
ஒரு ஸ்பூன் சந்தனப் பொடியுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து நன்கு பேஸ்ட்டாக்கி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகமும் பளிச்சென்று மாறிவிடும்.
#BeautyTips
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: அமெரிக்கர்களின் புதிய பயண சாதனை - tamilnaadi.com