பொழுதுபோக்கு

நகப்பூச்சு மீது காதல் கொண்டவரா நீங்கள்?? – ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்!

Published

on

கை, கால் நகங்களை நகப்பூச்சினால் அழகு பார்ப்பது அதிக பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. உடுத்தும் ஆடைகளுக்கு பொருத்தமாகவும் நகப்பூச்சு தீட்டி அழகுபார்ப்பார்கள்.

அதனால் வெளியாகும் வாசனை பலருக்கும் பிடித்தமானது. ஆனால் நெயில் பாலிஷ்கள் உடல் நலத்திற்கு தீங்கு பயக்கும் இயல்புடையது. இதனைப் பலரும் ஏற்பதில்லை. அதன் வாசனை
உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இயலுமானவரை நகப்பூச்சினை தினமும் பாவனை செய்வதை விறுத்த வேண்டும். சில நகப்பூச்சு பாவனையின்னோது நகங்கள் உலர்ந்து மஞ்சள் நிறத்திற்கு மாற்றமடையும்.

சேர்க்கப்படும் டிபூட்டல், பார்மாலிடிகைடு, பத்தாலேட்,டோலுன் போன்ற ரசாயனங்கள் உடலிற்கு தீங்கு பயக்கும் தன்மையுடையவை

மென்மைக்கும். நிற பொலிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது நகத்தின் வழியே ஊடுருவி உடல்நல விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தொடர்ச்சியான பயன்னபட்டினால் நரம்பு மண்டலம், மூளை போன்றவை பாதிப்புக்குள்ளாகக்கூடும். தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பல பிரச்சினைகளையும் உருவாக்க வாய்ப்புள்ளது.

டிபூட்டல் பத்தாலேட் என்ற ரசாயன பதார்த்தம் மற்றும் நிறப் பூச்சுப் போல செயல்பட்டு பொலிவு தன்மையை உண்டாக்கும். இது நாளமில்லா சுரப்பிகள், சுவாச கோளாறுகள் சார்ந்த கோளாறுகளுக்கும் வழிவகுக்கும்.

நகப்பூச்சினை அதிகம் உபயோகப்படுத்தாமல் விஷேச நாட்களில் மட்டும் பயன்படுத்தலாம். அன்றே நகப்பூச்சினை நீக்கி நகங்களை செம்மையாக்கி விடுவதும் சிறந்தது.

#BeautyTips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version