பொழுதுபோக்கு

“மகிழ்ச்சி என்பது பட்டாசுகள் போல் வெடிக்கப்பட வேண்டும்” வைரலாகும் நயன் – விக்கி காணொலி

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ்சிவன் ஜோடியின் தீபாவளி கொண்டாட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம்வரும் விக்னேஷ்சிவனும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் அண்மையில் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர்.

விக்னேஷ்சிவன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். அடிக்கடி நயனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு வருபவர். இந்த நிலையில் தற்போது தனது காதலி நயனுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவர் “மகிழ்ச்சி என்பது ஒரு பயிற்சி. அது பட்டாசுகள் போல வெடிக்கப்பட வேண்டும். அதை தினமும் அனைவரும் செய்யுங்கள். நமது இலக்கை அடைவதற்கான வழி எதுவானாலும் அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் மகிழ்ச்சி என்பதை மறக்காதீர்கள், நம் மகிழ்வதற்கும் வாழ்க்கையை கொண்டாடுவதற்கும் பண்டிகைகள் தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன. அன்றாட பணிகளில் இருந்து சற்று விலகி சிறிது நேரம் மகிழ்ச்சிக்காக ஒதுக்குங்கள். அவ்வாறு இருந்தீர்களானால் நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ நயன்தாரா – விக்னேஷ்சிவன் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version