பொழுதுபோக்கு

தினம் ஒரு அவகோடா – அளவில்லா நன்மைகள்

Published

on

வெண்ணெய்ப் பழம் என அழைக்கப்படும் அவகோடா பெயருக்கு ஏற்றாற் போல் இந்தப் பழத்தின் சதைப்பகுதியானது வெண்ணெய் போன்று வழுவழுப்பாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் அவகோடாவும் ஒன்று.

இதில் 25 இற்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து எம்மைக் காக்கின்றன.

இதில் நிறைந்துள்ள மருத்துவ மகிமைகளை பார்ப்போம்.

  • அவகோடா இதயத்துக்கு செல்லும் குருதிக் குழாய்களில் கொழும்பு அடைக்காமல் மாரடைப்பு, இதய நோய்கள் இன்றி எம்மை நீண்ட காலம் வாழ இந்தப் பழத்தின் எண்ணெய் பயன்படுகின்றது.
  • இயற்கையாகவே இந்தப் பழத்தில் அதிக கலோரிகள் நிறைந்து காணப்படுவதால் இதில் உள்ள விற்றமின் ஏ கண்பார்வை திறமை பாதுகாக்கின்றது.
  • நோய்களை அண்டவிடாது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
  • இந்த நோய் எதிர்ப்பு சக்திமூலம் 30 வகையான புற்றுநோய் காரணிகளையும் வேருடன் அழிக்கச் செய்கின்றது.
  • சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற புண், வீக்கம் ஆகியவற்றை குணமாக்க இந்தப் பழத்தை பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
  • அவகோடா குடல்ப் பகுதியை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்றுவதால் வாய்த்துர்நாற்றத்தையும் தடுக்கின்றது.
  •  வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியத்தை விட அவகோடாவில் 35 வீதம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் உயர்குருதி அமுக்கம் கட்டுப்படுகிறது. அத்துடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும் சமன் செய்கிறது.
  • கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.
  • அத்துடன் கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதுடன் முடி உதிர்தலையும் தடுக்கின்றது.
  • சூரிய கதிர்வீச்சுக்களில் இருந்து வெளியாகும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து எம்மை பாதுகாக்க அவகோடாவிலுள்ள கரோடினாய்டுகள் உதவிபுரிகின்றன.
  • மேலும் இந்தப் பழத்திலுள்ள எண்ணெய் சரும எரிச்சலுக்கு சரியான நிவாரணியாக பயன்படுகிறது.

செரிமாணத்துக்கு
அவகோடாவில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானமடையச் செய்து நச்சுப் பொருட்களை கழிவுகளாக வெளியேற்றுகின்றன.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு தொடர்பானவற்றையும் இதிலுள்ள நார்ச்சத்து சரிசெய்கின்றது.
எமது அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவீதத்தை இந்தப் பழம் பூர்த்தி செய்கின்றது.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம் இந்தப் பழத்தில் ஏனைய பழங்களை விட அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

இந்த போலிக் அமிலம் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடுகளை சரி செய்ய இன்றியமைதவையாகும்.
மேலும் இந்தப் பழத்திலுள்ள விற்றமின் கே குருதி உறைதலுக்கு துணைபுரிந்து தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பை அளிக்கின்றது.

கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற காலை மயக்கம் மற்றும் வாந்தி ஆகியவற்றை இந்தப் பழத்திலுள்ள பி6 கட்டுப்படுத்துகின்றது.

தினமும் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டு வர சருமம் பளபளப்பாவதுடன் என்றும் இளமைக்கும் வழிவகுக்கின்றது.
#Beauty

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version