பொழுதுபோக்கு

இளநரை பிரச்சினையா? – இயற்கை வழியில் டிப்ஸ்

Published

on

இன்றைய இளம் சமுதாயம் கவலை கொள்கின்ற விடயங்களில் இளநரை பிரச்சினையும் ஒன்றாகும். இந்தப் பிரச்சினை ஆண் , பெண் இருபாலாருக்குமே மனதளவில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணும்.

இளம் வயதில் இளநரை ஏற்படுவதால் தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து மனச்சோர்வு நிலை உண்டாகும். இளநரை ஏற்படுவதால் அவர்களுக்கு வயதான தோற்றம் உண்டாகிறது.

இதற்கு இயற்கைப் பொருள்களைக் கொண்டு எவ்வாறு சரிசெய்வது என்று பார்ப்போம்.

 

  • தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து அதனை தலையில் தடவி மசாஜ் செய்து அலசி வாருங்கள். இதனை வாரம் இருமுறை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
  • நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி பின் அதனை எண்ணெய் இட்டு அந்த எண்ணெய்யை சூடாக்கி தலையில் மசாஜ் செய்து வந்தால் வெள்ளை முடி மறைந்து கருமை உண்டாகும்.
  • கருவேப்பிலையை மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போன்று செய்து தலையில் தடவி ஊற விடுங்கள். பின் சிறிது நேரம் கழித்து அலசுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
  • இளநரைக்கு மருதாணி சிறந்த இயற்கை சாயமுறையாகும். மருதாணியுடன் கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் செய்து தலையில் பூசி அரைமணி நேரம் கழித்து குளித்து வர நரைமுடியின் நிறம் மாறும்.
  • வெந்தயம் ஊறவைத்து பேஸ்ட் போல் அரைத்து தலைக்கு தடவி ஊறவைத்து கூந்தலை அலசி வந்தால் நரைமுடி தானாகவே மறைந்துவிடும்.
  • கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்தி பின் இந்த எண்ணெண்யை வடிகட்டி இரவில் கூந்தலில் தேய்த்து மசாஜ் செய்து வர கூந்தல் கருமையாகும்.
  • பீட்ரூட், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தேன், தயிர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒன்றாக உணவில் சேர்த்து வாருங்கள்.
  • அத்துடன் மன அழுத்தம், டென்ஷன், தூசி தூக்கமின்மை, சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போதல், முடி வறட்சி போன்றவற்றாலும் இளநரைமுடி உண்டாகும். எனவே இவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் சிறந்த தீர்வாக அமையும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version