பொழுதுபோக்கு

தொப்பையை குறைக்க வெண்ணை?

Published

on

நாம் எமது உடல் ஆரோக்கியத்தை பேண சத்தான உணவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அத்தகைய நேரத்தில் சரியான உணவைத் தெரிவு செய்தல் வேண்டும். வெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க 

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வெண்ணெய் சிறந்தது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். அத்துடன் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உடல் எடையை குறைக்க உதவும். உடலிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கும் போது இதய நோயைத் தவிர்ப்பது எளிது.

தொப்பை, எடையை குறைக்கின்றது

வயிறு பெரிதாகுவதை தடுப்பதற்கு வெண்ணெய் நுகர்வு உதவியாக இருக்கும். குறைந்த கொழுப்பு உணவை உட்கொள்வதன் மூலம், உடல் பருமனை அதிகரிப்பதில் இருந்து விடுபடலாம். மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு வெண்ணெயில் நிறைந்து காணப்படுகிறது. இதை சிறிய அளவில் உட்கொள்வதால் உடல் எடையை சரியாகப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 குடல் புற்றுநோயை தடுக்கிறது

ஐசோஃப்ளேவோன்கள், பைட்டோஸ்டெரால்ஸ், ரெஸ்வெராட்ரோல் மற்றும் பினோலிக் அமிலங்கள் போன்றவை வெண்ணெயில் உள்ளன. அவை புற்றுநோய்க்கு எதிராக செயற்படுகின்றன. அதனால் புற்றுநோயின் பிரச்சினையிலிருந்து விலகி இருப்பதோடு அதன் அறிகுறிகளையும் போக்குவதற்கு உதவுகின்றது.

மார்பக வளர்ச்சியைத் தடுக்கிறது

வெண்ணெயில் காணப்படும் லினோலிக் அமிலம் உடலில் தேவையற்ற சதை வளர்ச்சியை தடுக்கிறது. ஊளை சதை வளர்ச்சியை தடுக்கின்றமைக்கு வெண்ணெய் முக்கிய பங்கு வகிப்பதால், அவை மார்பக வளர்ச்சிக்கும் எதிராக செயற்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் உடலில் நோய்த்தொற்றுகள் மற்றும் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விற்றமின்-ஏ உதவியாக இருக்கும். வைட்டமின்-ஏ கொண்ட உணவுகள் வெண்ணெயிலும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, வெண்ணெய் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு நன்மை பயக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு

வெண்ணெய் புற்றுநோய் போன்ற ஒரு கொடிய நோயிலிருந்து விலக்கி வைக்கிறது. இது புற்றுநோயின் பிரச்சினையிலிருந்து விலகி இருப்பதோடு அதன் அறிகுறிகளையும் போக்க உதவும். வெண்ணெய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படலாம்.

சாப்பிட வேண்டிய அளவு

தினமும் ஒரு கரண்டி அல்லது 14 கிராம் வெண்ணெய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

தீமைகள்

வெண்ணெய் நன்மைகளை பயப்பவை போலவே அதிக நிறைவுற்ற கொழுப்பு வெண்ணெய் உட்கொள்வதும் தீங்கும் விளைவிக்கும்.

வெண்ணெய் அதிக அளவு கொழுப்பைக் கொண்டுள்ளது. இதை அதிகமாக உட்கொண்டால் கொழுப்பின் அபாயத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் மற்றும் இதய நோயையும் ஏற்படுத்தும்.

வெண்ணெயில் நல்ல அளவு கொழுப்பு காணப்படுகிறது. எனவே அதிகமாக உட்கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும்.

ஆகவே வெண்ணெய்யில் உள்ள நன்மைகளைப் பெற்றுக் கொள்ள அளவோடு உட்கொண்டு ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version