பொழுதுபோக்கு

மீண்டும் மலையாள திரையுலகில் அரவிந்தசாமி

Published

on

மீண்டும் மலையாள திரையுலகில் அரவிந்தசாமி

தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் அரவிந்தசாமி ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து பம்பாய், மின்சாரக்கனவு போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் மீண்டும் நடிப்புத்துறைக்குள் பிரவேசித்த அரவிந்தசாமி தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், கள்ளபார்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அரவிந்சாமி புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோபோபன் உடன் அரவிந்சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றது.

தமிழில் இப் படத்துக்கு ‘ரெண்டகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

அரவிந்சாமி இறுதியாக கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘தேவராகம்’ எனும் மலையாளப் படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘ஒட்டு’ படம் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்சாமி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version