பொழுதுபோக்கு
வெறும் 10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட்
வெறும் 10 நிமிடத்தில் சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட்
என்னதான் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு வகைகளை தயாரித்து கொடுத்தாலும், ஒரே விதமான உணவுகளை வழங்கும்போது அவர்கள் உண்பதற்கு பின் நிற்பார்கள். ஆனால் அன்றாடம் வீட்டில் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தியே அவர்கள் விரும்பி உண்ணக்கூடியவாறு உணவு வகைகளைத் தயார் செய்யலாம்.
அவ்வாறு வெறும் பத்தே நிமிடத்தில் தயாரித்து, குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய ஒரு சிம்பிளான, ஆனால் சுவையான ஒரு உணவு உங்களுக்காக.
தேவையான பொருள்கள் :
உருளைக்கிழங்கு – 2
முட்டை – 5
மிளகாய் – 5
பெ.வெங்காயம் – 1
வெண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தைமிக மெல்லியதாக நீளம் நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள்..
பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை மிகச் சிறிதாக அரிந்துகொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அவித்து எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள்.
முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.
இந்த முட்டை கலவையில் சிறிதாக வெட்டிவைத்துள்ள வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். விரும்பின் தக்காளியையும் சிறிதாக வெட்டி கலவையுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் வெண்ணெய் போட்டுக்கொள்ளுங்கள். வெண்ணெய் சூடானதும், அதில் கலந்துவைத்துள்ள உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் விட்டு ஆம்லெட் போல் வேகவிடுங்கள்.
ஒரு பக்கம் நன்றாக வெந்ததும், அதனை திருப்பி போட்டு வேக விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது குழந்தைகளுக்கு பிடித்த சுவையான ஆம்லெட் தயார்.
ஆம்லெட்டை தட்டில் வைத்து முக்கோணமாக வெட்டி பரிமாறுங்கள்.
You must be logged in to post a comment Login