சமையல் குறிப்புகள்
முட்டை பிரியாணி
முட்டை பிரியாணி தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி – 2 கப்
முட்டை – 4
வெங்காயம் – 5
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு – 50 கிராம்
தயிர் – அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 5
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் – பாதி
புதினா, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
தாளிக்க
பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
செய்முறை
வெங்காயம், தக்காளியை நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து பசையாக அரைக்கவும். தயிருடன் தேங்காய் துருவலைக் கலந்துவைக்கவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2 முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் முட்டையுடன் ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு சதுரத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த பசை மற்றும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, தயிர் கலவையை சேர்க்கவும்.
பின்னர் கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் வேக வைத்த முட்டையை மேலாக கீறிச் சேர்த்து, ஆம்லெட் துண்டுகளையும் சேர்த்து பக்குவமாகக் கிளறவும்.
மற்றொரு அடுப்பில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் அளவில் மீதி தாளிக்கும் பொருள்கள், சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைத்து தயார் நிலையில் வைக்கவும். கொதிக்கும் நீரை வதக்கிய மசாலாவில் ஊற்றவும். கொதித்ததும் அரிசியைச் சேர்த்து ஒருமுறை கிளறி, விரும்பினால் கலர் பவுடர் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
குக்கரை மூடி 15 நிமிடங்கள் தம்மில் வைத்து இறக்கவும். சுவையான முட்டை பிரியாணி தயார். விருப்பமெனில் தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். விரும்பின் நெய், முந்திரி சேர்க்கலாம்.
You must be logged in to post a comment Login