ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 21.08.2023 : இன்று கருட பஞ்சமி- Today Rasi Palan

Published

on

இன்றைய ராசி பலன் 21.08.2023 : இன்று கருட பஞ்சமி- Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21, 2023, சோபகிருது வருடம் ஆவணி 4 திங்கட்கிழமை. சந்திரன் கன்னி ராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். துலாமில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள நாள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார். இன்று கருட பஞ்சமி நாளில் கருட வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்யலாம்.

மேஷ ராசி பலன்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று மிகவும் அமோகமான நாளாக அமையும். குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்பங்கள் செய்யுங்கள். காதல் வாழ்க்கையில் இன்று சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். ஒரு குடும்ப உறுப்பினரைப் பற்றி கொஞ்சம் கவலைப்படலாம். மாணவர்கள் கல்வியில் தடைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.
கருட பஞ்சமியான இன்று கருட பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட குழந்தை பாக்கியம், குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை சார்ந்த விஷயங்களில் சில புதிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

குழந்தைகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். பதில் இருக்கும் பாரம் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த விருப்பங்கள் நிறைவேறும். இந்த நீங்கள் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கலாம். வியாபாரத்தில் சில புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசி நேயர்கள் இன்று சாதகமான நாளாக அமையும். வியாபாரம் விருத்தி அடையும். குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மிகவும் ஏற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களிலும், முடிவுகளிலும் நல்ல பலனை பெறலாம். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். நீங்கள் நினைத்தது போல் பணம் வந்து சேரும். இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்ய காரியங்கள் வெற்றி ஏற்படும்.

கடக ராசி பலன்

கடக ராசி நேயர்களுக்கு இன்று அலைச்சல் ஏற்படுத்தக்கூடிய நாளாக இருக்கும். இன்று குடும்பத்தில் மனக்கசப்புகள் உண்டாகும்.
நீங்கள் புற்று இருக்கக்கூடிய ஆலயத்தில் சென்ற வழிபாடு செய்வது நல்லது.

இன்று எந்த வேலை செய்தாலும் முழு ஆர்வத்துடன் செய்து அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இன்று உங்கள் சகோதரர்களின் ஆலோசனைகள் உங்கள் தொழிலை முன்னேற்றும். இன்று எந்தவொரு பிரச்சனையையும் நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று மனதிற்கு நிறைவான நாளாக அமையும். சிலருக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருக்கும். அதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும். இன்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று வழக்கு விசாரணைகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவி தக்க சமயத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். சக்கர வாகனங்கள் வாங்குவது, விற்பது தொடர்பான குழப்பங்கள் தீரும்.
கருட பஞ்சமியான இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்வதும் நன்மை தரும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி நேயர்கள் இன்று மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் தேர்வு தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிர்கால சேமிப்புத் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாகவே இருக்கும். அதனால் நீங்கள் செய்யும் வேலையில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பெண்களுக்கு உயர்வு தரக்கூடிய நாளாக இருக்கும். விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு திருமண யோகங்கள் கை கூடும் இன்று உங்களுக்கு கிரக தோஷங்கள் நீங்கி சுபங்கள் ஏற்படும். உங்களுக்கு சுப செலவுகள் காத்திருக்கிறது.மனதிற்கு அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

மகர ராசி பலன்
மகர ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும்.உங்களுக்கு ராகு மற்றும் கேதுவின் அமைப்பினால் வேலை தொடர்பான விஷயங்களில் சாதக நிலை ஏற்படும். மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளும் தீரும். இன்று மன நிறைவான நாளாக இருக்கும்.

கும்ப ராசி பலன்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்தோஷமான நாளாக அமையும். இன்று உங்கள் செயலில் வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

மீன ராசி பலன்
மீன ராசி நேயர்களுக்கு இன்று மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் பிறந்த நபர்கள் சேரக்கூடிய நாளாகவும், சகோதர சகோதரிகளின் ஒற்றுமை மேலோங்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த கடன் பிள்ளைகள் தீர்ப்பதற்கான வழி பிறக்கும். நிதி சந்தன நன்மைகள் உண்டாகும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version