ஜோதிடம்

எதிர்பாராமல் கிடைக்கும் பரிசு பொருட்களால் கிடைக்கும் அதிர்ஷ்டம்

Published

on

திடீரென்று நாமே எதிர்பாராமல், நம்முடைய கைக்கு ஒரு பொருள் வந்து சேரும். அது பரிசு பொருளாக கிடைத்திருக்கலாம் அல்லது எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது நமக்கு தெரிந்தவர்கள் யாராவது நமக்கு அந்த பொருளை கொடுக்கலாம். எப்படியோ ஏதோ ஒரு வழியில் நம் கைக்கு எதிர்பாராமல் வந்த ஒரு பொருளின் மூலம் நம்மை அறியாமலே நமக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கும்.

அஷ்டலட்சுமி

உங்களுடைய வீட்டில் திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் வைத்திருப்பீர்கள். அதற்காக உங்களுக்குத் தெரிந்தவர்கள் சுவாமி படங்களை உங்களுக்கு பரிசாக கொடுக்கலாம். இப்படி வரும் பரிசு பொருட்களில் அஷ்டலட்சுமியின் திருவுருவப்படம், மகாலட்சுமியின் திருவுருவப்படம் உங்களுக்கு அன்பளிப்பாக வந்தால் நீங்கள் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி.

இப்படி பெறப்பட்ட அஷ்டலட்சுமி, மகாலட்சுமி திருவுருவப்படத்தை உங்கள் வீட்டின் வடக்கு திசை பார்த்தவாறு மாட்டி வைக்க வேண்டும். பூஜை அறையிலேயே வடக்கு பார்த்தவாறு வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. – Advertisement – நிறைய பேர் பிள்ளையார் படத்தை வாங்கி பரிசாக கொடுப்பார்கள். அப்படி உங்களுக்கு பிள்ளையார் படம் பரிசாக வந்தால் அதை உங்களுடைய நிலைவாசல் படியில் மாட்டி வைக்கலாம். நிலைவாசல் படிக்கு உள்பக்கமும் மாட்டலாம். வெளிப்பக்கமும் மாட்டலாம். வீட்டிற்கு உள்ளே பார்தபடியும் மாட்டிக் கொள்ளலாம். வீட்டிற்கு வெளியே பார்த்தவாறும் மாட்டிக்கொள்ளலாம்.

இது தவிர மற்றபடி வேறு எந்த இறைவனின் திரு உருவப் படம் வந்தாலும் அதை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். பரிசு பொருளாக பெற்ற சுவாமி படங்களை சில பேர் பூஜை அறையில் வைக்க மாட்டார்கள்.

ஆனால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல உள்ளத்தோடு அடுத்தவர்கள் வாங்கிக் கொடுக்கக்கூடிய இப்படிப்பட்ட அன்பளிப்பை, நமக்கு பரிசு பொருளாக வரக்கூடிய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதில் எந்த தவறும் கிடையாது.

நந்தி

பெரும்பாலும் இதை பரிசு பொருளாக யாரும் யாருக்கும் அவ்வளவாக வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் யாருக்காவது பரிசளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், வெள்ளியில் இந்த நந்தியை வாங்கி கொடுங்கள். வாங்கி கொடுக்கக்கூடிய உங்களுக்கும் அது நிறைய நன்மைகளை செய்யும்.

இந்த நந்தியை பரிசு பொருளாக பெறுபவர்களுக்கு செல்வ செழிப்பு நிறைவாக இருக்கும். பரிசு பொருளாக நந்தி கிடைத்தால் அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்வது மிக மிக நல்லது. (வெள்ளி தவிர மற்ற உலோகங்களில் நந்தி கிடைத்தாலும் அதை வாங்கி அடுத்தவர்களுக்கு பரிசு பொருளாக கொடுக்கலாம்.)

கோமாதா

பசுமாடு தன்னுடைய கன்றுடன் இருக்கும் படி கோமாதா சிலையை, காமதேனு சிலையை அல்லது படம் வாங்கி அடுத்தவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம். இது பரிசு கொடுப்பவர்களுக்கும் நன்மை தரும்.

பரிசை பெறுபவர்களுக்கும் நம்மை தரும். இப்படி அன்பளிப்பாக வந்த கோமாதா சிலையை பூஜை அறையில் வைத்து தினமும் அந்த கோமாதா சிலைக்கு பூஜை செய்து வந்தால் குடும்பத்தில் செல்வ கடாட்சம் பெருகும்.

 

 

 

இப்படிப்பட்ட பரிசு பொருட்கள் எதுவுமே எனக்கு வரவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இனிமேல் உங்கள் சொந்த பந்தங்களுக்கோ, உங்களின் நண்பர்களுக்கோ பரிசளிக்க வேண்டும் என்றால் மேல் சொன்னபடி இந்த பொருட்களை எல்லாம் வாங்கி கொடுங்கள். அடுத்தவர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட பரிசை கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கும் நல்லது நடக்கும்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version