ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (22.12.2021)

Published

on

Medam

பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகை தருவார்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

வியாபார கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

பயணங்களால் நன்மை உண்டாகும். யாரும் உங்களை ஏமாற்றலாம்.

 

Edapam

நோய்கள் நீங்கி ஆரோக்கியம் நலமடையும். புதிய முயற்சிகளுக்கு சிறுதடைகள் ஏற்பட்டு பின் வெற்றிகரமாக நடக்கும்.

சக நண்பர்களுடனான பிரச்சினைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். மன நிம்மதி அதிகரிக்கும்.

சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.

 

Mithunam

பண வரவு வரும். மன குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.

பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் முயற்சிகள் பலன் தரும்.

உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் பலன் கிட்டும்.

 

Kadakam

பண வரவுடன் திடீர் செலவும் வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு மாறுதல் மூலம் இலாபம் அடைவீர்கள்.

பணவரவு தாராளமாக இருப்பதால் கடன் பிரச்சினை குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

 

Simmam

குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் பண வரவால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

பழைய கடன்கள் தீரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

 

Kanni

திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

நல்ல செய்திகள் தேடி வரும். நகைகள் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். அரச உதவிகளை எளிதில் அடைவீர்கள்.

அரச பணி புரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

 

Thulaam

குடும்ப பிரச்சினைகள் நீங்கும். மேலதிகாரிகளால் நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

உடன் வேலை செய்பவர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சொத்து வழக்குகளில் சாதகப்பலன் கிட்டும்.

பயணங்களைத் தவிர்க்கவும். வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

 

Viruchchikam

சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.

மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும்.

வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

 

Thanusu

குடும்பத்தில் தாராள தன வரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.

திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

வியாபார எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிலும் கவனம் தேவை.

 

Maharam

குடும்பத்தில் அமைதி நிலவும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.

உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும்.

 

                                               Kumbam

எந்த விடயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

உடன்பிறந்தவர்களால் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

 

Meenam

காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

தொழில் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

 

 

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version