ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (19.12.2021)

Published

on

Medam

விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காதல் விவகாரங்கள் நன்மை தரும். மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும்.

 

Edapam

நிதானம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

பணி புரியும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். தவறாக பேசினாலும் வருத்தப்படாதீர்கள்.

திடீர் பணவரவு கிடைக்கும்.

 

Mithunam

தம்பதியர்களுக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம் நகையை கவனமாக கையாளுங்கள்.

சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரும். உடல் ஆரோக்கியமும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.

எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

Kadakam

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வேலையை பலரும் பாராட்டுவார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் நன்மை ஏற்படும்.

வேலையில் நிர்வாகத்திறமை வெளிப்படும். காதலில் உற்சாகம் பிறக்கும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்.

 

Simmam

உடன்பிறந்தவர்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். கடன் பிரச்சினை தீரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.

உடல் நலம், பொருளாதார நலம் சுமாராக இருக்கும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகரிக்கும்.

காதல் துணையுடனான நினைவுகள் கவலை தரும்.

 

Kanni

கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் புரிந்து கொள்வார்கள்.

காதல் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். பணியிடத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.

வேலைப்பளு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான நாளாக அமையும்.

 

Thulaam

எதையோ இழந்த கவலை வந்து நீங்கும். வேலையில் கவனமும் நிதானமும் தேவை.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

தொழில் விடயத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும்.

 

Viruchchikam

தம்பதியரிடையே நன்மைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும். உறவினர்களால் ஆதாயமும் உண்டு.

விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.

வாகனத்தை பராமரிப்பு செய்வீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

 

Thanusu

வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.  சிலர் உதவியை நாடுவார்கள்.

உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உடல் நலம் நலமாக இருக்கும்.

வார்த்தைகளில் கடுமையாக இருக்க வேண்டாம். புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.

 

Maharam

சொந்தங்கள் தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.

மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். காதல் நினைவுகள் மகிழ்ச்சியை தரும்.

காதல் விவகாரங்கள் மணவாழ்க்கை மகிழ்ச்சியை தரும்.

 

Kumbam

தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை.

விருந்தினர் வருகை அதிகரிக்கும். துணையுடன் காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

பணி புரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீடு பராமரிப்பு செலவுகள் வரும்.

 

Meenam

செய்யும் செயல்களில் வெற்றி தேடி வரும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்.

வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உழைப்பிற்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில் மிகச்சிறப்பான நாள். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.

 

 

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version