ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (18.12.2021)

Published

on

Medam

நல்ல செய்தி வீடு தேடி வரும். உறவினர்கள் வருகை தருவார்கள். செய்யும் முதலீடுகள் இரட்டிப்பாகும்.

தொழிலில் புதிய சலுகைகளால் இலாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வரும்.

திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

 

Edapam

எடுக்கும் முயற்சிகள் பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும்.

தன வரவு உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

Mithunam

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வீட்டில் கருத்து வேறுபாடு உண்டாகும்.

விட்டு கொடுப்பு அவசியம். சிந்தித்து செயல்பட வேண்டும்.

தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.

 

Kadakam

எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக உதவிகள் கிடைக்கும்.

பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.

 

Simmam

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். இலாபம் இரட்டிப்பாகும். புதிய கருவிகள் வாங்குவீர்கள்.

பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.

 

Kanni

உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

செலவுகளை குறைப்பது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பும் கிட்டும்.

அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

Thulaam

மன உளைச்சல் அதிகமாகும். பேச்சில் கவனம் தேவை. வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.

மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

உணவுகளில் கவனம் தேவை. காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.

 

Viruchchikam

கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும்.

குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்றும்.

வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும்.

 

Thanusu

பணவரவு அமோகமாக இருக்கும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

பூர்வீக சொத்துக்களால் பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் அடைவீர்கள்.

பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

 

Maharam

பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.

 

Kumbam

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உறவினர்கள் வருகையால் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் இலாபம் கிடைக்கும்.

சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

 

Meenam

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபார முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

 

 

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version