ஜோதிடம்
இன்றைய ராசி பலன் (05.12.2021)
Medam
எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
இரவு நேர வாகன பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுப்பு அவசியம்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
Edapam
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகள் நீங்கும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
Mithunam
இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உடன்பிறப்புக்களின் ஒற்றுமை கூடும்.
சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களால் பலன்கள் கிட்டும்.
Kadakam
பணவரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் இலாபம் அதிகரிக்கும்.
நண்பர்களால் மனநிம்மதி உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். போராடி வெற்றி பெறுவீர்கள்.
பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
Simmam
பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.
உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்த மனஸ்தாபங்கள் மறையும்.
முதலீடுகளுக்கு இலாபம் கிடைக்கும்.
Kanni
தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் இலாபமும் வருமானமும் அதிகரிக்கும்.
பிள்ளைகளால் சுபசெய்திகள் தேடிவரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும்.
பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.
Thulaam
குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.
நெருங்கியவர்களுடன் பிரச்சினைகள் தோன்றும். பொறுமையை இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
பேசும் போது நிதானம் தேவை. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
Viruchchikam
பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமணம் சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
புதிய பொருட்களை வாங்குவீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
Thanusu
எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் மறையும்.
பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.
Maharam
புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகள் விலகும்.
வியாபாரத்தில் பண கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புது நம்பிக்கையும் தெம்பும் உண்டாகும்.
குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
Kumbam
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.
பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை.
Meenam
உடன் பிறந்தவர்கள் மூலம் மனநிம்மதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம்.
பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி பாதிப்புகள் சீராகும்.
குடும்பத்தோடு குதூகலமாக இருப்பீர்கள்.
#Astrology
You must be logged in to post a comment Login