ஜோதிடம்
கடிகாரமும் வாஸ்துவும்
எமது வாழ்வில் மிகவும் முக்கியமானதும் இழந்தால் மீண்டும் பெற முடியாததும் என்றால் அது நேரம்தான்.
உலகத்தின் அனைத்து அசைவுகளையும் நிர்ணயிப்பது நேரம் ஒன்றே.
இப்பொழுது பெரும்பாலானோர் போனில் நேரம் பார்ப்பதைத்தான் பழக்கமாக கொண்டுள்ளனர்.
நீங்கள் அணியும் கைக்கடிகாரத்திலும் உங்களுக்கான அதிர்ஷ்டம் உண்டு என்றால் நம்புவீர்களா?
ஆம் நீங்கள் அணியும் கைக்கடிகாரம் அணியும் முறையில் அதிர்ஷ்டம் தங்கியுள்ளது. அணியும் விதத்தில் அதிர்ஷ்டத்தை பாதிக்கின்ற வாஸ்து சாஸ்திரம் உண்டு எனக் கூறப்படுகிறது.
அதனால் சில விடயங்களை கவனித்து கொண்டால் எம் அன்றாட வாழ்வில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் பின்பற்ற வேண்டிய நில விதிகள் உள்ளன.
அணியும் போது சில விடயங்களை நீங்கள் கவனத்தில் எடுத்தக் கொள்ளாவிடின் பிரச்சினைகள் தோன்றி உங்கள் வேலையில் தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.
வாஸ்துவின் படி தங்கம் அல்லது வெற்றி நிற கைக்கடிகாரங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.
நீங்கள் வேலைக்கான நேர்காணல் அல்லது பரீட்சைக்கு செல்லும் போது தங்க நிற அல்லது வெற்றி நிற கடிகாரம் அணியுங்கள்.
கைக்கடிகாரத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்காதீர்கள்.
இரவில் கைக்கடிகாரங்களை கழற்றி தலையணை அடியில் வைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு.
இவ்வாறு செய்தால் உங்கள் மனதில் எதிர்மலை ஆற்றலை கொண்டுவரும்.
அத்துடன் தூக்கம் தொடர்பான பிரச்சினைகளையும் உண்டு பண்ணும் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன் ஓடாத கைகடிகாரங்களை கைகளில் கட்டுதல் கூடாது. இதனால் நீங்கள் செய்யும் காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும் வாஸ்துவின் படி, இந்த கையில் தான் கடிகாரம் அணிய வேண்டும் என்ற விதி இல்லை. உங்கள் வசதிக்கேற்ப வாட்சை வலது அல்லது இடது கையில் அணியலாம்.
You must be logged in to post a comment Login