தொழில்நுட்பம்

இலவசமாக சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்க வேண்டுமா ? Microsoft Edge இன் புதிய வசதி…!!!

Published

on

இலவசமாக சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்க வேண்டுமா ? Microsoft Edge இன் புதிய வசதி…!!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Microsoft நிறுவனம் அவர்களுடைய Web Browser ஆன Microsoft Edge இனை தினமும் மேம்படுத்திய வண்ணம் இருக்கின்றார்கள். அத்துடன் BingChat என்ற செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் மூலம் பயனர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கியவண்ணம் இருக்கின்றார்கள்.

Microsoft designer என்பது Microsoft நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரு designing and creation tool ஆகும். இது Dall-E மற்றும் OpenAI text to image model இனைப்பயன்படுத்துகின்றது. இவை தற்போது பாவனையில் இருக்கும் image generator இல் முதன்மை இடங்களில் இருக்கும் செயற்கை தொழில்நுட்பங்களாகும்.

எவ்வாறு Microsoft Edge இனைப்பயன்படுத்தி, இலவசமாக சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் விளம்பரங்களை உருவாக்கம் செய்வது ?

Microsoft Edge browser இன் sidebar சென்று Microsoft Designer என்பதை தெரிவு செய்வதன் மூலமாக பயன்படுத்துக்கொள்ள முடியும். உள்ளீடாக எங்களுக்கு எவ்வாறான படங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று தட்டச்சு செய்து வழங்குவதுடன் தேவையான அளவுகளை வழங்க வேண்டும். அவ்வளவு தான் உங்களுடைய சமூக வலைத்தளபதிவு அல்லது விளம்பரம் தயாராகிவிடும்.

நீங்கள் Microsoft Edge பயன்படுத்துபவராக இருந்தால் ஒருதடவை முயற்சி செய்து பாருங்கள்

Exit mobile version