தொழில்நுட்பம்

Apple iOS 17 இயங்குதளத்தில் வந்துள்ள புதிய மாற்றம்…!!!

Published

on

Apple iOS இயங்குதளத்தில் வந்துள்ள புதிய மாற்றம்…!!!

Apple நிறுவனம் தனது இயங்குதளமான iOS 17 developer beta இல் Call End button இன் இட அமைவினை மாற்றம் செய்துள்ளது. இப்போது, கீழ் வலதுபுறத்தில் இல்லாமல் அழைப்புத் திரையின் கீழ் நடுவில் காணப்படுகின்றது. இது ஒரு சிறிய மாற்றம், ஆனால் இந்த மாற்றத்தினை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக புதிய இயங்குதளத்துடன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட முதல் iOS 17 developer beta இல் End call button ஆனது புதிய இடத்தில் உள்ளது, ஆனால் சில வெளியீடுகள் திருத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட பின்னர் இது சமீபத்தில் மக்களின் கவனத்தைப்பெற்றது. கடந்த வாரத்தில் இருந்து இந்த மாற்றம் குறித்து மக்கள் அதிகம் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மாற்றப்பட்டு பழைய இடத்தில் வைக்கப்பட நிறைய வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்கின்றார்கள்.

நீங்கள் பேசும் நபர்களின் முகங்களைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட iOS 17 இன் புதிய அம்சத்திற்காக ஆப்பிள் அழைப்புத் திரைக் கட்டுப்பாடுகளை திரையின் கீழே மாற்றியிருக்கலாம். இதன் மூலம் போதுமான இடம் கிடைப்பதன் மூலம் புதிய அம்சங்களை

Apple iOS

இலகுவாக புகுத்த முடியும் அத்துடன் பயன்படுத்துவதையும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

1 Comment

  1. Pingback: Apple நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு…!!! - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version