தொழில்நுட்பம்
ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட Apple iPhone
ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட Apple iPhone 1 4GB
2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதலாவது தலைமுறை Apple iPhone 1 4GB ஒன்று கடந்த July 16, 2023 அன்று விற்பனை விலையை விட 380 மடங்கு அதிக விலைக்கு இலங்கை மதிப்பில் 61 மில்லியன் ரூபாவிற்கு (6 கோடி) ஏலத்தில் விற்பனை செய்து புதிய சாதனை படைத்து இருக்கின்றது.
வெறும் 499$ இற்கு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 1 4GB ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல்தடவை ஆகும்.
Sunday’s sale இனை நடத்திய LCG Auctions எனும் நிறுவனத்தின் கூற்றுப்படி iPhone 1 4GB ஆனாது iPhone 1 8GB உடன் ஒப்பிடும் போது 20 தடவைகள் அபூர்வமானது. அதாவது iPhone 4GB இனை அவ்வளவு இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது.
2007ம் ஆண்டு Steve Jobs முதலாம் தலைமுறை iPhone இனை அறிமுகப்படுத்தும் போது இரண்டு வகையான iPhone இனை அறிமுகப்படுத்தினார். ஒன்று iPhone 1 4GB மற்றையது iPhone 1 8GB. அறிமுகப்படுத்திய வெறும் இரண்டு மாதங்களில் iPhone 1 4GB நிறுத்தப்பட்டு, iPhone 1 8GB மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு காரணமாக மக்களுக்கு அதிகளவான நினைவகம் தேவைப்பட்டதாக கூறப்படுகின்றது.
புதிய சாதனை ஏலத்தில் நாங்களும் பங்குபற்றியது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது என்று LCG Auctions நிறுவன தலமை அதிகாரி Mark Montero தெரிவித்து இருந்தார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: iPhone 15 பற்றி வெளியான அறிவிப்பு...!!! - tamilnaadi.com